உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஐரோப்பிய  பல்கலையுடன் இணைந்து செயல்பட முடிவு 

ஐரோப்பிய  பல்கலையுடன் இணைந்து செயல்பட முடிவு 

கோவை; கிணத்துக்கடவு, ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரிக்கு, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த டர்ஹாம் பல்கலையின், பன்னாட்டு துணை செயல் தலைவர் ஹெலன் தாம்சன், இணை பேராசிரியர் அனிஷ் ஜிண்டால், பொறியியல் பிரிவு பேராசிரியர் சைமன் ஹாக் குழுவினர் வருகை புரிந்தனர்.இரு நிறுவனங்களும் ஒன்றிணைந்து, மாணவர்கள் உயர்க்கல்வி பயில்வதற்கு தேவையான வாய்ப்புகளைப் பற்றி கலந்து ஆலோசித்தனர்.டர்ஹாம் பல்கலையில், சர்வதேச தரத்தில் உயர்கல்வி பயில தேவையான உதவிகளையும், கல்வி உதவி தொகைகளையும், ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி மாணவர்களுக்கு வழங்குவது குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. இரு கல்வி நிறுவன பேராசிரியர்களும் இணைந்து, ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தப்பட்ட கல்வி பயிற்றுவித்தல் பிரிவுகளில் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளனர். மாணவர்களுக்கு, டர்ஹாம் பல்கலையின் குறுகிய கால தொழில் முறை பயிற்சிகளை வழங்குவதற்கும், மகிழ்ச்சியோடு ஒப்புதல் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை