மேலும் செய்திகள்
இன்று பத்திரப்பதிவு உண்டு பதிவுத்துறை அறிவிப்பு
11-Feb-2025
மேட்டுப்பாளையம்; தைப்பூசம் விடுமுறை நாளான நேற்று மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகம், சார் பதிவாளர் ராமமூர்த்தி தலைமையிலான ஊழியர்களுடன் இயங்கியது. பத்திரப்பதிவு செய்ய வந்த மக்கள் எந்த இடையூறும் இன்றி, தாமதமும் இன்றி, பத்திரங்களை பதிவு செய்தனர். மேலும் அங்கு வந்த பொது மக்களுக்கு பத்திரப்பதிவு செய்யப்படுவது தொடர்பாக விழிப்புணர்வு வழங்கப்பட்டது.இதுகுறித்து சார்பதிவாளர் ராமமூர்த்தி கூறுகையில், ''மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் பொதுமக்கள் பத்திரங்களை எளிதாக பதிவு செய்து கொள்ளலாம். சந்தேகங்கள் இருப்பின் நேரடியாக என்னை அணுகலாம். தகுந்த ஆவணங்களுடன் வந்து பத்திரங்களை பதிவு செய்து, உடனடியாக பத்திரங்களை பெற்றுச் செல்லலாம் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தைப்பூசம் நாளில் பத்திரப்பதிவு விறுவிறுப்பாக நடந்து,'' என்றார்.---
11-Feb-2025