உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இரவில் செயல்படும் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு தர கோரிக்கை

இரவில் செயல்படும் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு தர கோரிக்கை

சென்னை:தமிழகத்தில், 24 மணி நேரமும் கடைகள் செயல்படுவதற்கான அனுமதியை, அரசு மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ள நிலையில், இரவில் செயல்படும் கடைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல், போலீஸ் ரோந்து பணியை அதிகரிக்கும்படி, அரசுக்கு வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ், ஆண்டுக்கு, 20 லட்சம் ரூபாய்க்கு மேல் வணிகம் செய்வோர் கட்டாயம், ஜி.எஸ்.டி., பதிவு செய்ய வேண்டும். தமிழகத்தில், 11.50 லட்சம் வணிகர்கள், ஜி.எஸ்.டி., பதிவு செய்துள்ளனர். பெரும்பாலும் அவர்கள் தான் நள்ளிரவு வரை வணிகம் செய்கின்றனர். கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், 24 மணி நேரமும் திறந்திருக்க, தமிழக அரசு வழங்கிய அனுமதி, அடுத்த மாதம், 4ம் தேதி முடிவடையும் நிலையில், மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.இந்த உத்தரவின் கீழ், 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்கள் உள்ள கடைகள், 24 மணி நேரமும் செயல்படும். அரசு விதிகளுக்கு உட்பட்டு கடைகள் திறந்திருந்தாலும், இரவு 12:00 மணிக்குள் மூடுமாறு கூறி, போலீசார் இடையூறு செய்வதாக புகார்கள் எழுகின்றன.இதுகுறித்து, தமிழக உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் கூறியதாவது:சிங்கப்பூர், மலேஷியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில், நள்ளிரவு வியாபாரம் சிறப்பான முறையில் உள்ளது. இடநெருக்கடி, போக்குவரத்து நெரிசல் போன்றவற்றால், மொத்த விலை கடைகளில் இருந்து, சிறு வணிகர்கள் நள்ளிரவில் பொருட்களை வாங்குகின்றனர்.எனவே, நள்ளிரவில் செயல்படும் கடைகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. இரவில் கடைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், போலீசார் ரோந்து செல்வதை அதிகப்படுத்த வேண்டும். கடைகளின் உரிமையாளர்களும், இரவு பணிக்கு கூடுதல் பணியாளர்களை நியமித்து, வேலை வாங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை