உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆஷா பணியாளர்களை நிரந்தரமாக்க கோரிக்கை

ஆஷா பணியாளர்களை நிரந்தரமாக்க கோரிக்கை

வால்பாறை: ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஆஷா பணியாளர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, இ.கம்யூ., கட்சி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.வால்பாறை தாலுகா இ.கம்யூ., கட்சி செயலாளர் மோகன், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் உள்ள, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிராமப்புற சுகாதார திட்டத்தின் கீழ், ஆஷா பணியாளர்கள், விடுப்பின்றி, 24 மணி நேரமும் பணிபுரிந்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகளின் அனைத்து சுகாதார திட்டங்களையும் அமுல்படுத்தி வருகின்றனர்.வால்பாறையில் மட்டும், 45 பேர் ஆஷா பணியாளர்களாக உள்ளனர். இவர்கள் கொரோனா தொற்று காலத்திலும் முன்களப்பணியாளர்களாக பணியாற்றி உள்ளனர்.இவர்களுக்கு, தற்போது மாதம் தோறும், 5,750 ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. குறைவான ஊதியத்தால் அவர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன.எனவே, 15 ஆண்டுகளுக்கு மேலாக கிராமப்புற செவிலியர்களுக்கு, நிகராக பணியாற்றி வரும் ஆஷா பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மாத சம்பளமாக, 18 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியமாக வழங்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை