பத்திர நகல் எழுதுவோர் கோரிக்கை ஆர்பாட்டம்
கோவை: கோவை மாவட்ட தமிழ்நாடு பத்திரம் நகல் எழுதுவோர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆவண எழுத்தர்கள் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ”பத்திரம் நகல் எழுதுவதை பாதிக்கும் தனியார் மயமாக்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். இ– டெண்டர் முறையை ரத்து செய்ய வேண்டும், 3.0 திட்டத்தை திணிக்க கூடாது, மக்களின் சொத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், தொழில் உரிமையை பறிக்ககூடாது” என்று கோஷமிட்டனர். மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். செயலாளர் உமாபதி, நிர்வாகிகள் பங்கேற்றனர்.