உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மத்திய அரசை கண்டித்து காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் 

மத்திய அரசை கண்டித்து காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் 

பொள்ளாச்சி;மத்திய அரசை கண்டித்து, கோவை தெற்கு மாவட்ட காங்., கட்சி சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.கோவை தெற்கு மாவட்ட காங்., கட்சி சார்பில், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பகவதி தலைமை வகித்தார். நகர தலைவர் செந்தில்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோதிமணி, மாநில வக்கீல் பிரிவு தலைவர் வக்கீல் ரவி, வட்டார தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.மத்திய அரசின் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் பா.ஜ., ஊழல் செய்ததாக கூறி, காங்., கட்சியினர் சார்பில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ