கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, கோதவாடி ஊராட்சியில் ரோடு மற்றும் பள்ளி கட்டடம் கட்ட பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது.கிணத்துக்கடவு, கோதவாடி ஊராட்சியில், பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. இதில்,4வது வார்டுக்கு உட்பட்ட இரண்டு இடங்களில், தார் ரோடு,265மீட்டரும், குடியிருப்பு பகுதியில் கான்கிரீட் ரோடு,160மீட்டர் அமைக்க, அங்கீகரிக்கப்படாத வீட்டு மனை பிரிவு நிதியில்,12.55லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கோதவாடியில்,60ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ் நிலை தண்ணீர் தொட்டி, 8லட்சம் மதிப்பீட்டில் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேவேந்திரன் காலனியில்,8லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் கற்கள் பதிக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு நடுநிலைப் பள்ளியில் புதிதாக பள்ளி கட்டடம் கட்ட சி.எஸ்.ஆர்., நிதியில் இருந்து,32லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்டுள்ளது. பணிகளை குறித்த காலத்துக்குள் நிறைவு செய்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து, ஊராட்சி தலைவர் ரத்தினசாமி கூறுகையில், ''ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. இதில்,14மற்றும்15வது நிதி குழு மற்றும் பிற வகை நிதியில் இருந்து மொத்தமாக, 1.05கோடி நிதியில் வளர்ச்சி பணிகள் திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.