உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவிலுக்கு அறங்காவலர்கள்நியமிக்க பக்தர்கள் வலியுறுத்தல்

கோவிலுக்கு அறங்காவலர்கள்நியமிக்க பக்தர்கள் வலியுறுத்தல்

கோவை, : புகழ்பெற்ற பேரூர், பூண்டி வெள்ளிங்கிரியாண்டவர், வேணுகோபாலசுவாமி கோவில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்க வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பேரூர் பட்டீஸ்வரர் கோவில், பூண்டி வெள்ளிங்கிரியாண்டவர் கோவில், ஆர்.எஸ்.புரம் சலிவன்வீதி வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவில் ஆகியவற்றில், தினமும், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். விழாக்காலங்களில் பக்தர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் இருக்கும்.இக்கோவில்களில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் நிலுவையில் உள்ளன. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு பணிகள் மேற்கொள்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.மேற்குறிப்பிட்டுள்ள மூன்று கோவில்களுக்கும் இதுவரை தமிழக அரசு அறங்காவலர்களை நியமிக்கவில்லை. அறங்காவலர்களை நியமிக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்துவதோடு, பக்தர்களுக்கு தேவையான மேம்பாட்டுப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பக்தர்கள் கூறுகையில்,'கோவிலுக்கு ஆன்மிகத்தில் நாட்டமுள்ள அறங்காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். அப்போது தான் ஆன்மிகப்பணிகள் தொய்வின்றி நடக்கும் அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை