உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  அகற்றப்படும் அம்மன் கோயிலுக்கு வேறு இடம் தர பக்தர்கள் கோரிக்கை

 அகற்றப்படும் அம்மன் கோயிலுக்கு வேறு இடம் தர பக்தர்கள் கோரிக்கை

அன்னூர்: 200 ஆண்டுகளாக உள்ள அம்மன் கோயில் அகற்றப்படுவதால், வேறு இடம் தர பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை கலெக்டர் அலுவலகத்தில், குன்னத்தூர் பொதுமக்கள் அளித்த மனு : கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலையில், குன்னத்தூரில் 200 ஆண்டுகளுக்கு மேலாக மாகாளியம்மன் கோயில் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த 1000 குடும்பங்கள் இங்கு வழிபாடு செய்து வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலை துறையினர் சாலை விரிவாக்கம் செய்வதால், கோயிலை வேறு இடத்துக்கு மாற்ற கோரிக்கை விடுத்தனர். தற்போது உள்ள கோயிலுக்கு தென்புறம், காலியிடம் உள்ளது. அந்த காலியிடத்தில் கோயில் கட்ட ஆட்சேபனை இல்லை என, ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனாலும் சிலர் தங்கள் சொந்த உபயோகத்திற்காக, அந்த இடத்தை கோயிலுக்கு பயன்படுத்துவதை தடுக்கின்றனர். அந்த இடத்தில் கோயில் கட்ட அனுமதி கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில், பல லட்சம் ரூபாய் செலவழித்து அஸ்திவாரம் அமைத்தோம். வருவாய்த் துறையினர் இடித்து அகற்றி விட்டனர். அந்த இடத்தில் கோயில் கட்டிக் கொள்ள, மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை