உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடற்புழு நீக்க முகாம்

குடற்புழு நீக்க முகாம்

மாவட்டத்தில் 1,697 அங்கன்வாடி மையங்கள், 985 தனியார் பள்ளிகள், 1,070 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், 150 கல்லுாரிகள், 90 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 530 துணை சுகாதார நிலையங்கள் மூலம் 'அல்பெண்டசோல்' எனும் குடற்புழு நீக்க மாத்திரை, (ஆகஸ்ட்10) இலவசமாக வழங்கப்படுகிறது. ஒன்று முதல் 19 வயதுக்குட்பட்ட 9.70 லட்சம் குழந்தைகள், 20 முதல் 30 வயதுக்குட்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் தவிர்த்து 2.53 லட்சம் பெண்கள் என மொத்தம் 12.24 லட்சம் பயனாளிகளுக்கு, இம்மாத்திரை வழங்கப்படவுள்ளது. முகாமில் மாத்திரை உட்கொள்ளத் தவறிய குழந்தைகளுக்கு, ஆக.,17ம் தேதி மீண்டும் வழங்கப்படும் என, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுசாமி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை