உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  அரசு மருத்துவமனையில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு

 அரசு மருத்துவமனையில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு

கோவை: கோவை அரசு மருத்துவமனை சர்க்கரை நோயியல் துறை மற்றும் யோகா, இயற்கை மருத்துவ வாழ்வியல் மையம் சார்பில், உலக சர்க்கரை நோய் தின விழிப்புணர்வு நிகழ்வு, நேற்று நடந்தது. டீன் கீதாஞ்சலி தலைமை வகித்து, நிகழ்வுகளை துவக்கி வைத்தார். மருத்துவ நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு பேரணி, ஊட்டச்சத்து உணவு முறை கண்காட்சி உள்ளிட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. சிகிச்சைக்காக வந்திருந்த மக்களுக்கு, உணவு பழக்கவழக்கங்களில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள், கட்டுப்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. தொடர்ந்து, சர்க்கரை நோயாளிகளுக்கான யோகா செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில், சர்க்கரை நோய் பிரிவு தலைவர் வெண்கோ ஜெயபிரசாத், யோகா மற்றும் வாழ்வியல் மைய மருத்துவ அலுவலர் டாக்டர் புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை