உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுகாதார நிலைய செயல்பாடு விளக்கம்

சுகாதார நிலைய செயல்பாடு விளக்கம்

வால்பாறை : ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடு குறித்து ஆதிவாசி மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. வால்பாறை டவுன் காமராஜ்நகரில் எஸ்.எஸ்.ஏ., சார்பில் ஆதிவாசி மாணவர்களுக்கான உண்டு, உறைவிட நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியில் சங்கரன்குடி, பரமன்கடவு, நெடுங்குன்று, கருமுட்டி, கவர்க்கல் உள்ளிட்ட பல்வேறு செட்டில் மெண்ட் பகுதிகளை சேர்ந்த ஆதிவாசி மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களின் கல்வித்தரம் உயரும் வகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடு குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் மருத்துவமனைக்கு மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். அங்கு வரும் நோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது, எந்த நோய்க்கு எந்த வகை மருந்து வழங்கப்படவேண்டும், நோய் வரும் முன் நம்மை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது குறித்தும் டாக்டர்கள் சிவராமகிருஷ்ணன், பொன்மலர் ஆகியோர் செயல்விளக்கம் காண்பித்தனர்.இதற்கான ஏற்பாடுகளை எஸ்.எஸ்.ஏ., ஆசிரியர் பயிற்றுநர் செந்தில்குமார், பள்ளி காப்பாளர் ரகுபதி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

M Ramachandran
செப் 22, 2025 11:41

இந்த கேசை போட்டது ஏராருங்ங் அண்ணே அவரு கோர்டில் வாபஸ் வாங்கசொல்லவேண்டியது தானெ கபில்லுக்குபல்லுடையந்த சிபிலு காசு கிடைய்யப்பதற்கு எதையும் தின்னும் செய்யும் ஜென்மமே.


தமிழன்
ஆக 12, 2025 21:23

தமிழ்நாட்டின் திராவிட தியாகி செந்தில் பாலாஜி அவர்களுக்கு மன்னிக்கவும் மாண்புமிகு செந்தில் பாலாஜி அவர்களுக்கு இதுபோன்ற நிலைமை ஏற்பட்டது தமிழ்நாட்டுக்கு உச்ச நீதிமன்றம் இழைத்த துரோகம்.


Mahendran Puru
ஆக 12, 2025 17:00

அலஹாபாத் போனால் நல்ல தீர்ப்பு வாங்கிவிடலாம் என்று சொல்கிறார்கள். அங்கே நீதி சிரிப்பாய் சிரிக்கிறதாம். அவர்கள் சுப்ரீம் கோர்டையே கேள்வி கேக்கிறார்களாம்.


Mani . V
ஆக 12, 2025 04:42

மக்களின் வரிப்பணத்தை விரயம் செய்யும் இவரைப் போன்ற ஊழல் பேர்வழிகளை உடனேயே காலி செய்ய வேண்டும்.


முக்கிய வீடியோ