உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பஸ் ஸ்டாண்டில் சிதிலமடைந்த கட்டடங்கள் மூடல்! பாதுகாப்பு கருதி நடவடிக்கை

பஸ் ஸ்டாண்டில் சிதிலமடைந்த கட்டடங்கள் மூடல்! பாதுகாப்பு கருதி நடவடிக்கை

பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில், பயணியர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்ட நகராட்சி நிர்வாகம், பஸ்கள் வெளியே செல்லும் பகுதியை தற்காலிகமாக மூடி வைத்துள்ளது.பொள்ளாச்சி நகராட்சியில் கடந்த, 1985ம் ஆண்டு பழைய பஸ் ஸ்டாண்ட்டும்; 2009ம் ஆண்டு புதிய பஸ் ஸ்டாண்ட்டும் கட்டப்பட்டது. பழைய பஸ் ஸ்டாண்டில் பழநி, திருப்பூர், கோவை உள்ளிட்ட பஸ்கள் நிறுத்தி இயக்கப்படுகின்றன. பஸ் ஸ்டாண்டில், 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கடைகளில், மொத்தம், 31 கடைகள் வாடகைக்கு விடப்பட்டன.ஓராண்டுக்கு முன், திருப்பூர் பஸ்கள் செல்லும் பகுதியில் உள்ள பயணியர் நிழற்கூரை சிதிலமடைந்து இருந்தது. இதையடுத்து அந்த நிழற்கூரை இடித்து அகற்றப்பட்டது.இந்நிலையில், பருவமழை பெய்து வருவதால் அங்கு செயல்பட்டு வந்த ஒரு ேஹாட்டலின் மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து விழுந்தது. அசம்பாவிதங்களை தடுக்க, நகராட்சி கமிஷனர் கணேசன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டனர்.அதன்படி, தற்போது, பஸ் ஸ்டாண்டை சுற்றியுள்ள கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், பஸ் ஸ்டாண்ட் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.பழநி பஸ்கள் வெளியேறும் பகுதியும் மூடப்பட்டதுள்ள. பழநி பஸ்கள் பயணியரை ஏற்றிய பின், திருப்பூர் ரேக்குக்கு சென்று, அந்த வழியாக வெளியேறுகின்றன.நகராட்சி கமிஷனர் கூறியதாவது: பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில் நிழற்கூரை சிதிலமடைந்த நிலையில் அதை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதை தொடர்ந்து, கடந்தாண்டு ஆக.,30ம் தேதி கடைகளை காலி செய்யக்கூறி நோட்டீஸ் வழங்கப்பட்டது.அதன் பின், வாழ்வாதாரம் பாதிக்கும் என கடைக்காரர்கள் கூறியதையடுத்து, கால அவகாசம் வழங்கப்பட்டது.தற்போது, தென்மேற்கு பருவமழை பெய்யும் சூழலில், அசம்பாவிதங்களை தடுக்க ஆய்வு செய்யப்பட்டு, கடந்த, 23ம் தேதி கடைக்காரர்களுக்கு இறுதி நோட்டீஸ் வழங்கப்பட்டது.இதையடுத்து, பழநி பஸ்கள் வெளியேறும் பகுதியில் கான்கிரீட் பெயர்ந்து நிற்பதால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல வேண்டாம் என தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளது. கடைகளை அடைக்கவும் உத்தரவிடப்பட்டது. பருவமழை ஓய்ந்ததும், பழநி பஸ்கள் வெளியேறும் பகுதி மட்டும் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை