மேலும் செய்திகள்
இன்றைய மின்தடை: பொள்ளாச்சி
11 minutes ago
ராமபிரான் கோவிலில் நாளை ஆண்டு விழா
12 minutes ago
பள்ளியில் உணவுத்திருவிழா
15 minutes ago
அரசு கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் பொறுப்பேற்பு
17 minutes ago
பொள்ளாச்சி: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் சார்பில், 'பதில் சொல் -- பரிசை வெல்' மெகா வினாடி --- வினா போட்டி, பொள்ளாச்சி அருகே வே.காளியாபுரம் பாரஸ்ட்ஹில் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. மாணவர்களின் கற்றல் ஆர்வம் மற்றும் நுண்ணறிவு திறனை ஊக்குவித்து, படிப்பின் மீதான ஆர்வத்தை விரிவுப்படுத்துவதற்காக, 'தினமலர்' நாளிதழ் 'பட்டம்' இதழ் சார்பில், மெகா வினாடி -- -வினா போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. நடப்பாண்டு, 'தினமலர்' நாளிதழின், 'பட்டம்' மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் இணைந்து நடத்தும் வினாடி- - வினா போட்டிக்கு, 'சத்யா ஏஜென்சிஸ்' மற்றும் 'ஸ்போர்ட்ஸ் லேண்ட்' நிறுவனங்கள், 'கிப்ட் ஸ்பான்சர்'களாக இணைந்துள்ளன. இப்போட்டியில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து, 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர். பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் அணியினர், அரையிறுதிக்கு தகுதி பெறுவர். அவர்களில் இருந்து தேர்வாகும் எட்டு அணியினர், இறுதிப் போட்டியில் பங்கேற்பர். அவ்வகையில், பொள்ளாச்சி அருகே வே.காளியாபுரம் பாரஸ்ட்ஹில் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது.தகுதிச்சுற்றில், 119 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 மாணவ, மாணவியர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு பள்ளி அளவில் இறுதிப் போட்டியில் பங்கேற்றனர். மூன்று சுற்றுகளாக நடந்த விறுவிறுப்பான இறுதி போட்டியில், 'எச்' அணி முதல் பரிசை வென்றது. அந்த அணியில் இடம் பெற்ற 8ம் வகுப்பு மாணவர் சஞ்சய், 7ம் வகுப்பு மாணவர் மிதுலேஷ்தரன் ஆகியோர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் உமாதேவி, ஒருங்கிணைப்பாளர் ஜெயதுர்கா, ஆசிரியர் வேல்மாரி ஆகியோர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். அறிவு பெட்டகம் பள்ளி முதல்வர் உமாதேவி கூறுகையில், 'தினமலர் -- பட்டம்' இதழ் வாயிலாக, அறிவுத்திறன் சார்ந்த வினாக்கள், அறிவியல் கருத்துகள், சமூக மற்றும் வரலாற்று செய்திகள், தமிழ் உணர்வு ஏற்படுத்தும் காப்பியக் கதைகள், பொதுஅறிவு உள்ளிட்ட பல்வேறு நுணுக்க செய்திகளை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள முடிகிறது. படங்களுடன் வெளியாகும் தகவல்கள் கூடுதல் சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது. அறிவு பெட்டகமாக 'பட்டம்' இதழ் உள்ளது, என்றார்.
மாணவர் சஞ்சய்: 'பட்டம்' இதழில், எனக்கு பிடித்தது பேசும் பசுமை. இதில், பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகள் குறித்த விரிவான செய்திகள் படங்களுடன் வெளியாகிறது. விலங்குகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்கள், உலகில் பல்வேறு சூழ ல்களில் வாழும் உயிரினங்களின் உருவமைப்பு, வேறுபட்ட உணவுப் பழக்கங்கள் குறித்து முழுமையாக அறிந்து கொள்ள முடிகிறது. பட்டம் வாசிப்பது பாடத்திட்டத்துக்கும், பொது அறிவுக்கும் பயனுள்ளதாக உள்ளது. மாணவர் மிதுலேஷ்தரன்: 'பட்டம்' இதழில், ரிலாக்ஸ் ப்ளீஸ் என்ற பகுதி எனக்கு பிடிக்கும். இதில் உள்ள புதிர்கள், மூளைக்கு வேலை தரும் வகையில் உள்ளது. அதேபோல, படங்களுக்கு இடையிலான வித்தியாசங்கள் கண்டுபிடிப்பது, இனிமையான பொழுதுபோக்காக உள்ளது. அறிவியல் சார்ந்த பல்சுவை துணுக்குகள் வாயிலாக ஏராளமான தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது. 'பட்டம்' மாணவர்களுக்கு பயனுள்ள இதழ்.
11 minutes ago
12 minutes ago
15 minutes ago
17 minutes ago