உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இலங்கை பிரச்னையை வலியுறுத்தி செப்., 7ல் பார்லி முன் ஆர்ப்பாட்டம் :மா.கம்யூ., மாநில செயலாளர் தகவல்

இலங்கை பிரச்னையை வலியுறுத்தி செப்., 7ல் பார்லி முன் ஆர்ப்பாட்டம் :மா.கம்யூ., மாநில செயலாளர் தகவல்

கோவை : ''இலங்கை தமிழ் மக்களுக்கு சம உரிமை, அதிகார பகிர்வு வழங்க வலியுறுத்தி, செப்.,7ல் பார்லிமென்ட் முன் மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,'' என, கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் கூறினார்.கோவையில் நிருபர்களுக்கு ராமகிருஷ்ணன் அளித்த பேட்டி:ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காக மா.கம்யூ., கட்சி சார்பில் நாடு முழுவதும் ஊழல் எதிர்ப்பு இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. லோக்பால் வரம்புக்குள் பிரதமரையும் உட்படுத்த வேண்டும். உணவு பாதுகாப்பு மசோதாவை வெளியிட அரசு தயாராக உள்ளது. இதில், மாநில பொது வினியோகத் திட்டத்தில் மாநிலங்கள் அரிசி, கோதுமைக்குப் பதிலாக பணம் வழங்கலாம் என்ற ஆட்சேபகரமான ஷரத்துகள் இடம் பெற்றுள்ளன. இது விவசாயிகள், நுகர்வோரின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு முதலீட்டுக்கு தடை விதிக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில், தலைவர்களை நேரடியாக தேர்வு செய்யும் முறையை அமல்படுத்த வேண்டும்.பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட திருத்தத்தை கொண்டு வர வேண்டும். நில மோசடி வழக்குகளை விசாரிக்க தனிப்பிரிவு அமைத்துள்ளதை வரவேற்கிறோம். கடந்த ஐந்தாண்டுகளில் நடந்தது போல் நில மோசடிகள் இதற்கு முன் நடந்ததில்லை. நில அபகரிப்பு தொடர்பான வழக்குகளில் எந்த கட்சியினர் குற்றம் செய்திருந்தாலும், கட்சி பேதம் பார்க்காமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை தமிழ் மக்களுக்கு சம உரிமை, அதிகார பகிர்வு வழங்க வலியுறுத்தியும், 2009ம் ஆண்டு இறுதியில், அங்கு நடந்த மனித உரிமை மீறல்கள் மீது வெளிப்படையான விசாரணை நடத்தக் கோரியும், செப்.,7ல் பார்லி முன் மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடத்த இந்திய அரசு, இலங்கைக்கு தூதரக முறையில் நிர்பந்தம் அளிக்க வேண்டும். ஆக.,15ல் ஊழலுக்கு எதிராக உறுதிமொழி ஏற்கவுள்ளோம். சமச்சீர் கல்வி அமலுக்கு வந்துள்ளதை வரவேற்கிறோம். பொதுப் பாடத்திட்டம் மட்டுமே சமச்சீர் கல்வி ஆகி விடாது. ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். புதிய சட்டசபை கட்டடப் பணிகளை தொடர வேண்டும்; அந்த கட்டடத்தை பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு, ராமகிருஷ்ணன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை