உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முதலாமாண்டு துவக்க விழா

முதலாமாண்டு துவக்க விழா

கோவை : சீரபாளையம் அருகே கற்பகம் தொழில் நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ராமசந்திரன் தலைமை வகித்தார். பேராசிரியர் சுதா வரவேற்றார். கல்லூரியின் உள்கட்டமைப்பு, வசதிகள், ராக்கிங் தடுப்பு முறைகள் குறித்து கல்லூரி முதல்வர் ராமசந்திரன் பேசினார். ஒவ்வொரு மாணவரின் மேசையிலும் திருக்குறள் புத்தகம், ஆங்கில அகராதி, ஆங்கில இலக்கண புத்தகம், செய்திதாளும் கட்டிப்பாக இருக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு மூலக்காரணமான மனிதவளம், இந்தியாவில் அதிகமாக உள்ளது. அதை முறையாக பயன்படுத்துவதில் மாணவர்களுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது என, கல்லூரி நிறுவனர் வசந்தகுமார் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை