உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விஜயகாந்த் பிறந்தநாள் விழா

விஜயகாந்த் பிறந்தநாள் விழா

பேரூர் :விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி, தொண்டாமுத்தூர் ஒன்றிய தே.மு.தி.க., சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா, தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவிலில் ஒன்றிய அமைப்பாளர் தேவராஜ் தலைமையில் சிறப்புப் பூஜைகளுடன் துவங்கின. இதையடுத்து, உலியம்பாளையம் பார்வையற்றோர் பள்ளி, சீயோன் திருச்சபையில் காலை அன்னதானமும், தீனம்பாளையம், கலிக்கநாய்க்கன் பாளையம் பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி உபகரணப்பொருட்களும், தொண்டாமுத்தூர் அரசு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டன. புத்தூர் பால்வாடி பள்ளிக்கு பாய் உள்ளிட்ட உபகரணப்பொருட்களும், விராலியூர், இருட்டுபள்ளம் லிட்டில் அனாதை காப்பகங்களில் அன்னதானமும் நடந்தது. பச்சாபாளையம், செல்லப்பகவுண்டன்புதூர், மாதம்பட்டி, குப்பனூர் கிராமத்திலுள்ள அரசு துவக்க, நடுநிலைப்பள்ளிக் குழந்தைகளுக்கு மாவட்டசெயலாளர் பாண்டியன், தலைமைசெயற்குழுஉறுப்பினர் மாதம்பட்டி தங்கவேலு, மாவட்டபொருளாளர் முரளி உள்ளிட்ட நிர்வாகிகள் நோட்டுபுத்தகம், எழுதுபொருட்களை வழங்கினர். மருதமலை சுப்ரமணிய கோவிலில், தே.மு.தி.க., வினர் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். ஒன்றிய துணைசெயலாளர்கள் சசி, சம்பத், பேரூராட்சி கழக செயலாளர்கள் துரைராஜன், ரமேஷ், மூர்த்தி, ராஜன், சிவகுமார், ராஜன், சத்தியராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை