உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தமிழ்நாடு அரசு நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாடு அரசு நிர்வாகிகள் தேர்வு

பொள்ளாச்சி : தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கம் புதிய வட்ட நிர்வாகிகள் தேர்வு பொள்ளாச்சியில் நடந்தது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமை வகித்தார். சங்க துணை தேர்தல் ஆணையாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தார். சங்கத்தின் புதிய தலைவராக கணேசன், துணைத்தலைவராக முருகேசன், செயலாளராக பழனிசாமி, துணைச் செயலாளராக பாலசுப்ரமணியம், பொருளாளராக தங்கவேல் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக 5 பேரும், வட்ட செயற்குழு உறுப்பினர்களாக 9 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி