உள்ளூர் செய்திகள்

மனுநீதி நாள் கூட்டம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி திம்மங்குத்து கிராமத்தில் வரும் 22ம் தேதி மனுநீதிநாள் கூட்டம் நடக்கிறது. பொள்ளாச்சி தாலுகா ராமபட்டிணம் உள்வட்டத்திற்கு உட்பட்ட திம்மங்குத்து ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காலை 10.00 மணிக்கு கூட்டம் நடக்கிறது. பொள்ளாச்சி சப்-கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், பொதுப்பிரச்னைகள், நலத்திட்ட உதவி வேண்டி மனு கொடுக்கலாம்.மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு வழங்கப்படும். இத்தகவலை தாசில்தார் சின்னப்பையன் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை