உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காந்தி சிலையை மறைத்து பிளக்ஸ் வைத்ததால் அதிருப்தி

காந்தி சிலையை மறைத்து பிளக்ஸ் வைத்ததால் அதிருப்தி

வால்பாறை ; வால்பாறையில், காந்தி சிலையை மறைத்து பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளதால், மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.வால்பாறை காந்தி சிலை பஸ் ஸ்டாண்டில், சமீபகாலமாக அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சியின் போது, பல்வேறு அரசியல் கட்சியினர் போட்டி போட்டு காந்தி சிலை சுற்றிலும் விளம்பர பிளக்ஸ் வைக்கின்றனர். இதையடுத்து, காந்தி சிலையை மறைத்து விளம்பர பிளக்ஸ் வைக்கக்கூடாது என நகராட்சி சார்பில் எச்சரித்துள்ளனர்.பொதுமக்கள் கூறுகையில், 'காந்தி சிலையை மறைத்து அவ்வப்போது வைக்கப்படும் விளம்பர பிளக்ஸ்களை போலீசார் உடனடியாக அகற்ற வேண்டும். இது போன்று, பஸ் ஸ்டாண்டில் விளம்பர பிளக்ஸ் வைப்பதால், சில நேரங்களில் விபத்தும் ஏற்படுகிறது. காந்தி சிலை, பஸ் ஸ்டாண்ட் பகுதியில், விளம்பர பிளக்ஸ் வைக்க போலீசார் நிரந்தரமாக தடைவிதிக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ