உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  குளத்தின் நீர்வழிப்பாதையில் நீர் மாசடைந்ததால் அதிருப்தி

 குளத்தின் நீர்வழிப்பாதையில் நீர் மாசடைந்ததால் அதிருப்தி

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, கோதவாடி குளம் நீர்வழிப் பாதையில் தேங்கியுள்ள நீர் மாசடைந்துள்ளது. கிணத்துக்கடவு கோதவாடி குளம், 312.72 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த குளத்தில் இருந்து சூலக்கல், புரவிபாளையம் வழியாக கேரளா வரை நீர் வழிப்பாதை உள்ளது. இதில், கோதவாடி மயானம் அருகே நீர்வழிப்பாதையில் தண்ணீர் தேக்கமடைந்துள்ளது. இதன் ஓரத்தில் அதிகளவில் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. மேலும், நீரில் ஆங்காங்கே காய்ந்த மரத்துண்டுகள் மற்றும் இலைகள் குவிந்துள்ளது. இது மட்டுமின்றி, நீர்வழிப்பதை ஓரத்தில் இருக்கும் காய்ந்த செடிகள் தீவைத்து எரித்தது போல் காட்சியளிக்கிறது. தண்ணீரின் நிறமும் கருப்பாக காட்சியளிக்கிறது. இதனால் தண்ணீர் மாசுபட அதிக வாய்ப்பு உள்ளது. நீர் தேங்கிய பகுதியில் பெரும்பாலும் விளை நிலம் இருப்பதால், விவசாயம் பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே, நீர் வழிப்பாதையில் தேங்கியுள்ள தண்ணீர் மாசடைந்துள்ளது. அதனால், நீர்வழித்தடத்தில் உள்ள செடிகளை அகற்றி, சுத்தப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி