உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேங்கி கிடக்கும் குப்பை சுகாதாரம் பாதிப்பால் அதிருப்தி

தேங்கி கிடக்கும் குப்பை சுகாதாரம் பாதிப்பால் அதிருப்தி

வால்பாறை: வால்பாறையில், பல்வேறு இடங்களில் தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.வால்பாறை நகரில் உள்ள வீடு மற்றும் கடைகளில், நாள் தோறும் வெளியாகும் குப்பையை துாய்மை பணியாளர்கள் நேரில் சென்று சேகரிக்கின்றனர். அதன்பின், ஸ்டேன்மோர் சந்திப்பில் உள்ள திறந்தவெளி குப்பைக்கிடங்கில் மொத்தமாக குப்பை குவிக்கப்படுகிறது. கிடங்கில் கொட்டப்படும் குப்பையை தரம் பிரித்து, இயற்கை உரம் தயாரிக்கும் பணியில் துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், வால்பாறை நகரில் பல்வேறு இடங்களில் குப்பை அகற்றப்படாமல் உள்ளது. குறிப்பாக, வால்பாறை புதுமார்க்கெட், கக்கன் காலனி, சிறுவர் பூங்கா உள்ள பகுதிகளில், பல நாட்களாக குப்பை அகற்றப்படாமல் உள்ளது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது.பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர், கலைஞர் நகர், காமராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில், குப்பை முறையாக அகற்றப்படுவதில்லை. வீதிகளில் தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ