உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர் வழங்கல்

பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர் வழங்கல்

உடுமலை : உடுமலையில் பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு, தேஜஸ் ரோட்டரி மற்றும் உடுமலை உட்கோட்ட காவல்துறை சார்பில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தைப்பூசத்தையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து, பக்தர்கள் பாதயாத்திரையாக உடுமலை வழியாக பழநிக்கு செல்கின்றனர்.பக்தர்கள் பாதுகாப்புக்காக நேற்று தேஜஸ் ரோட்டரி மற்றும் உடுமலை உட்கோட்ட காவல்துறை சார்பில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது. மேலும் பிரியா நர்சிங் ஹோம் சார்பில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. உடுமலை டி.எஸ்.பி., சுகுமாறன் பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு பிஸ்கட் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி