உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முதியோர் வீடு தேடி ரேஷன் பொருள் வினியோகம்

முதியோர் வீடு தேடி ரேஷன் பொருள் வினியோகம்

அன்னுார்; முதியோர் வீடு தேடி சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் நேற்று அன்னுாரில் துவங்கியது. தமிழக அரசு சார்பில், 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீடு தேடி சென்று ரேஷன் பொருள் வழங்கும் திட்டம் நேற்று முன்தினம் சென்னையில் துவக்கி வைக்கப்பட்டது. இதையடுத்து, அன்னுார் தாலுகாவில், நேற்று வீடு தேடி ரேஷன் பொருள் வழங்கும் பணி துவங்கியது. அன்னுார் தாலுகாவில், 66 ஆயிரத்து 780 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இதில் 6,536 ரேஷன் கார்டுதாரர்கள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆவர். அவர்களுக்கு நேற்று ரேஷன் பொருள் வழங்கப்பட்டது. முதியோரின் வீடுகளுக்கு சென்று அவர்களுடைய கண் விழி ரேகையை ஸ்கேன் செய்து, அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை வழங்கினர். எனினும் பெரும்பாலான இடங்களில் கோதுமை மற்றும் மண்ணெண்ணெய் வழங்கப் படவில்லை. துவக்க நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை