உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாவட்ட அளவிலான ஓபன் டேபிள் டென்னிஸ்

மாவட்ட அளவிலான ஓபன் டேபிள் டென்னிஸ்

கோவை; கோவை மாவட்ட அளவிலான, ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி சரவணம்பட்டியில் நடந்தது. இதில், 20க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த முதல் அரையிறுதியில், வீரர் அலீம், 12-10, 7-11, 14-12, 10-12, 9-11 என்ற புள்ளி கணக்கில் வீரர் ஸ்ரீதரை வென்றார். இரண்டாம் அரையிறுதியில், வீரர் சங்கர், 11-6, 11-8, 11-9 என்ற புள்ளி கணக்கில் வீரர் தினேஷ் கிருஷ்ணாவை வென்று, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.பரபரப்பான இறுதிப்போட்டியில், வீரர் சங்கர், 11-7, 8-11, 11-8, 12-10 என்ற புள்ளிகளில் வீரர் அலீமை வென்று முதலிடம் பிடித்தார். வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !