உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சரவணம்பட்டியில் மாவட்ட ஓபன் டேபிள் டென்னிஸ்

சரவணம்பட்டியில் மாவட்ட ஓபன் டேபிள் டென்னிஸ்

கோவை; கோவை மாவட்ட அளவிலான 'ஓபன்' பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டி, சரவணம்பட்டியில் நடந்தது.இதில், 100க்கும் மேற்பட்ட வீரர்கள் திறமையை வெளிப்படுத்தினர். பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த முதல் அரையிறுதியில் வீரர் ஸ்ரீதர், 11-6, 7-11, 11-8, 10-12, 11-7 ஆகிய புள்ளிகளில், வீரர் சங்கரை வென்றார்.இரண்டாம் அரையிறுதியில், வீரர் பீஷ்மன், 11-8, 9-11, 12-10, 11-8 என்ற புள்ளிகளில் வீரர் சரவண ஆனந்தை வென்றார். இறுதிப்போட்டியில், வீரர்கள் ஸ்ரீதர், பீஷ்மன் ஆகியோர் மோதினர். பரபரப்பான ஆட்டத்தில், 11-7, 11-9, 9-11, 11-6 என்ற புள்ளிகளில், ஸ்ரீதர் வென்று முதலிடம் பிடித்தார்.வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசு வென்ற ஸ்ரீதர், காஞ்சிபுரம் மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்க செயலாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கமானது, சிறந்த வீரர்களை தேர்வு செய்து, மாநில அணிகளை உருவாக்கி வருகிறது. இதுபோன்ற போட்டிகள், மாநில அளவில் இடம்பெற வழிவகுப்பதாக வெற்றி பெற்ற வீரர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை