உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாவட்ட வருவாய் அளவிலான விளையாட்டு; வெள்ளியங்காடு பள்ளி பதக்கங்கள் குவிப்பு

மாவட்ட வருவாய் அளவிலான விளையாட்டு; வெள்ளியங்காடு பள்ளி பதக்கங்கள் குவிப்பு

கோவை ; மாவட்ட வருவாய் அளவிலான விளையாட்டு போட்டியில் வெள்ளியங்காடு அரசுப்பள்ளி மாணவ, மாணவியர் பதக்கங்கள் வென்று பெருமை சேர்த்துள்ளனர்.பள்ளிக்கல்வி துறை சார்பில், 40வது கோவை மாவட்ட வருவாய் அளவிலான பள்ளி மாணவ, மாணவியருக்கான விளையாட்டு போட்டிகள், இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நடந்தது.இதில், வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிலம்பம், வாள் சண்டை, டேக்வாண்டோ ஆகிய விளையாட்டுகளில் தனி நபர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில், ஆறு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும், 28 வெண்கலப் பதக்கங்கள் வென்று பெருமை சேர்த்துள்ளனர்.இதில், தர்ஷினி, பிரனிஷா, தர்ஷகா, ஸ்ரீநிதி, யோகபிரியா, யாஷினி, சமிக்கா ஸ்ரீ, பிரனேஷ், விஷ்ணு ஆகிய, 9 பேர் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். டேக்வாண்டோ போட்டியில், பிஜாஜ் அகமது இரண்டாம் இடமும், மோனிஷ் மூன்றாம் இடமும் பிடித்தனர்.மாநில போட்டிக்கு தகுதி பெற்ற மாணவ, மாணவியரையும், மாணவர்களுக்கு பயிற்சி அளித்துஊக்குவித்த உடற்கல்வி ஆசிரியர் ராஜ்குமார், ஆசிரியை தனுஷியா ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியர் சாக்ரடிஸ் குலசேகரன், ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமதாஸ் உள்ளிட்டோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ