மேலும் செய்திகள்
அறிவியல் கண்காட்சி
13-Oct-2025
கோவை: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பிறந்த நாள், தமிழகத்தில் 'இளைஞர்கள் எழுச்சி தினமாக' கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, கோவையில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டி, மாவட்ட பள்ளிக்கல்வி சார்பில், நேற்று (அக்.17) நடைபெற்றது. துணி வணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியில், 6 முதல் 8ம் வகுப்பு, 9 மற்றும் 10ம் வகுப்பு, 11 மற்றும் 12ம் வகுப்பு என மூன்று பிரிவுகளின் கீழ், மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த அறிவியல் கண்காட்சியில், 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 100க்கும் அதிகமான மாணவர்கள், தங்கள் கண்டுபிடிப்புகளுடன் பங்கேற்றனர். குறிப்பாக, 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று புதிய கண்டுபிடிப்புகளை சமர்ப்பித்தனர். 6-8ம் வகுப்பு பிரிவில் பிரசன்டேஷன் கான்வென்ட் பள்ளி, 8ம் வகுப்பு மாணவன் ரபிக்; 9-10ம் வகுப்பு பிரிவில் சுதந்திரா மேல்நிலைப்பள்ளி, 9ம் வகுப்பு மாணவன் கவினேஷ்; 11-12ம் வகுப்பு பிரிவில் அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் நந்தா முதலிடம் பிடித்தனர்.
13-Oct-2025