காப்பக குழந்தைகளிடையே மாவட்ட விளையாட்டு போட்டி
பொள்ளாச்சி; கோவை மாவட்ட காப்பக குழந்தைகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டியில், ஆழியாறு தாய் அன்பாலயம் காப்பக குழந்தைகள் வெற்றி பெற்றனர். தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, கோவை மாவட்ட குழந்தைகள் காப்பகங்களில் உள்ள குழந்தைகளிடையே பல்வேறு விளையாட்டு போட்டிகள் கோவையில் நடைபெற்றது. கேரம் போர்டு, செஸ் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. அதில், ஆழியாறு தாய் அன்பாலயம் குழந்தைகள் பங்கேற்று, முதல் இரண்டு இடங்களை பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளை காப்பக நிர்வாகிகள் பாராட்டினர்.