மேலும் செய்திகள்
லயன்ஸ் கிளப் தாராளம்
10-Oct-2025
கோவை:உக்கடம் பெரியகுளத்தில், ஸ்வதர்மா பவுண்டேஷன் மற்றும் லயன்ஸ் கிளப் ஆப் சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் சார்பில், சிறப்பு குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுடன், தீபாவளி கொண்டாட்டம் நடந்தது. இந்நிகழ்ச்சியில், ஸ்வதர்மா பவுண்டேஷன் நிறுவனர் அருணா, லயன்ஸ் கிளப் முன்னாள் கவர்னர் பழனிசாமி, லயன்ஸ் கிளப் ஆப் சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் துரைசாமி, கோவை விமான நிலைய இயக்குனர் சம்பத்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இதில், பாடல்கள், நடனம், சிலம்பம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடந்தன. சிறப்பு குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுடன் பட்டாசு வெடித்து, தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஏராளமான குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
10-Oct-2025