உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தீபாவளி சிறப்பு பஸ்கள் நேற்று முதல் இயக்கம்

தீபாவளி சிறப்பு பஸ்கள் நேற்று முதல் இயக்கம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் இருந்து, தீபாவளி கூட்ட நெரிசலுக்கு ஏற்ப சிறப்பு பஸ்களின் இயக்கம், நேற்று துவங்கியது. தீபாவளி பண்டிகை வரும், 20ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்வோரால் பஸ்களில் கூட்ட நெரிசல் அதிகரிக்கும். நெரிசலை சமாளிக்க, பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, பழநி, மதுரை, தேனி உள்ளிட்ட ஊர்களுக்கு 40 பஸ்கள் இயக்கப்படவுள்ளது. அதன்படி, நேற்று மதியத்தில் இருந்து, கூட்டத்துக்கு ஏற்ப பஸ்களின் இயக்கம் துவக்கப்பட்டது. அதேநேரம், பழைய பஸ் ஸ்டாண்டில், சிதிலமடைந்த கட்டடங்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், போதிய இருக்கை வசதிகள் கிடையாது. இரு தினங்களுக்கு தற்காலிக இருக்கை வசதி ஏற்படுத்தித் தர கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: சிறப்பு பஸ்களின் இயக்கம் நேற்று துவக்கப்பட்டது. கூட்டம் அதிகரிக்கும் பட்சத்தில் பஸ்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும். பஸ் ஸ்டாண்டில் ரேக்குகள் இல்லாத நிலையில், பேரிகார்டுகள் வைத்து, முறையாக பஸ்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பயணியர் கூட்டம் அதிகரிக்கும் போது, பஸ்சில் இடம் பிடிக்க கடும் போட்டி ஏற்படும். பயணியர் பாதுகாப்பு கருதி, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படவும் உள்ளனர். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை