உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திமுக.. அதிமுக., அராஜகம்! தட்டிக்கேட்ட பாஜ.,வினர் விரட்டியடிப்பு

திமுக.. அதிமுக., அராஜகம்! தட்டிக்கேட்ட பாஜ.,வினர் விரட்டியடிப்பு

கோவை: பல்லடத்தில், திமுக அதிமுக.,வினர், தேர்தல் விதிமுறைகளை மீறி அராஜகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டிய பா.ஜ.,வினரை, போலீசார் விரட்டியடித்தனர்.கோவை லோக்சபா தொகுதிக்கு பல்லடம் சட்டசபை தொகுதி, அண்ணாநகர் ஓட்டுச்சாவடியில், திமுக., அதிமுக.,வினர் தேர்தல் விதிமுறை மீறுவதாக பா.ஜ.,வினர் ஓட்டுச்சாவடியை முற்றுகையிட்டனர். முன்னதாக, அதிமுக எம்எல்ஏ ஆனந்தன் மற்றும் கட்சியினர் கட்சி கொடியுடன் துண்டு அணிந்து வந்ததாக கூறி பாஜ.,வினர் தட்டி கேட்டனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. பா.ஜ.,வினர் கூறுகையில், ''கட்சி சின்னம் பொறித்த பூத் ஸ்லிப் விநியோகிக்கும் திமுக.,வினர் ஓட்டு போட்டு வெளியே வந்ததும் அதை வாங்கிக் கொண்டு பண பட்டுவாடாவில் ஈடுபடுகின்றனர். ஓட்டுச் சாவடிக்குள்ளேயே கட்சி சின்னம் பொறித்த பூத் ஸ்லிப்கள் கொண்டு செல்லப்பட்டும் அதிகாரிகள் யாரும் கண்டு கொள்வதில்லை. பல்வேறு ஓட்டுச் சாவடிகளின் இதே நிலைதான் உள்ளது. இதேபோல் அதிமுக., எம்எல்ஏ., மற்றும் கட்சியினர், கட்சி கொடி, துண்டுடன் ஓட்டுச்சாவடிக்கு வந்தனர். விதிமுறை மீறி வந்த அவர்களிடம் கேள்வி கேட்டதற்கு எங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தொண்டர்களை தாக்க முயன்றனர். திமுக., அதிமுக.,வின் அராஜகத்தை தேர்தல் அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை'' என்றனர். முன்னதாக, அண்ணா நகர் ஓட்டுச்சாவடியை முற்றுகையிட்ட பா.ஜ.,வினரை போலீசார் அங்கிருந்து விரட்டியடித்தனர். குற்றச்சாட்டுகள், புகார்களை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கொடுங்கள். இதை தவிர்த்து தேவையின்றி கூட்டம் சேர்க்க வேண்டாம் என, டிஎஸ்பி., விஜிகுமார் கூறியதை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

GoK
ஏப் 19, 2024 19:38

கருணாநிதியின் வாரிசுகளை அரசியில் பக்கம் விடாதீர்கள் கொங்கு நாட்டின் எல்லைக்குள் வரவிடாமல் செய்தால் இதெல்லாம் சரியாகும்


மேலும் செய்திகள்