உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கோவை மாணவி பலாத்கார வழக்கு: மூவருக்கு டி.என்.ஏ., பரிசோதனை

 கோவை மாணவி பலாத்கார வழக்கு: மூவருக்கு டி.என்.ஏ., பரிசோதனை

கோவை: பீளமேடு விமான நிலையம் பின்புறம், பிருந்தாவன் நகர் பகுதியில், கடந்த 2ம் தேதி இரவில், கல்லுாரி மாணவி ஒருவர், ஆண் நண்பருடன் காருக்குள் பேசிக்கொண்டிருந்த போது, மொபட்டில் வந்த மூன்று நபர்கள், ஆண் நண்பரை தாக்கி விட்டு, மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து தப்பினர். இது தொடர்பாக சிவகங்கை மாவட்டம், சிங்கம்புனரியை சேர்ந்த சதீஸ், 30, இவரது சகோதரர் கார்த்திக், 21, மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த குணா,20, ஆகியோரை மறுநாள் போலீசார்துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர். நேற்று முன் தினம் அடையாள அணிவகுப்பு நடந்தது. குற்றம் சுமத்தப்பட்ட மூவரை, பாதிக்கப்பட்ட மாணவி அடையாளம் காண்பித்தார். கைதான மூவரும், பாலியல் பலாத்காரம் செய்ததை உறுதிபடுத்த, உயிரணு, ரத்த மாதிரிகள் சேகரித்து, டி.என்.ஏ., பரிசோதனைக்காக, சென்னையிலுள்ள அரசு பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை