உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டுமா? விரிவாக பதிலளித்த கோவை மக்கள்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டுமா? விரிவாக பதிலளித்த கோவை மக்கள்

2 026ல் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த ஐந்து ஆண்டுகளும், தங்கள் கூட்டணி ஆட்சியே தொடரும் என்கின்றனர் ஆளுங்கட்சியினர். ஆனால் கோவை மக்களின் பார்வையும், பதிலும் வேறாக உள்ளது.

'பெரியளவில் 'டாஸ்மாக்' ஊழல்'

இந்த ஆட்சியில் பல பிரச்னைகள் உள்ளன. இந்த அரசால் ஒவ்வொரு பிரச்னையையும் சமாளிக்க முடியவில்லை. டாஸ்மாக் ஊழல் பெரியளவில் நடந்துள்ளது. அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது. விவசாயிகள் வாழ முடியவில்லை. சம்பாதிக்கும் பணத்தை, வீட்டுக்கு கொண்டு சேர்ப்பதற்குள் போதும், போதும் என்றாகி விடுகிறது. எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.ஆகவே, ஆட்சி மாற்றம் கட்டாயம் வேண்டும்.- என்.கோபால்சாமி பொள்ளாச்சி

'வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை'

இவர்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பெரிதாக எந்த ஒரு விஷயத்தையும் செய்யவில்லை. ஆட்சிக்கு வரும் முன், பல வாக்குறுதிகள் தெரிவிக்கப்பட்டன. ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. ஊழல் தான் அதிகளவில் இருந்து வருகிறது. அதேபோல், எந்த ஒரு வளர்ச்சியும் மாநிலத்தில் இல்லை. அதற்கேற்ற திட்டங்களும் இல்லை. அப்புறம் ஏன் இந்த ஆட்சி?- எ.மணி சுல்தான்பேட்டை, சூலுார்

'தொழில்முனைவோர் பாதிப்பு'

எந்த ஒரு சலுகைகளும் இல்லை. குறிப்பாக தொழில்முனைவோருக்கு எவ்வித உதவியும் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக, பல தொழில்முனைவோர் தொழிலை கைவிட்டு வேறு பணிகளுக்கு சென்றுள்ளனர். ஒவ்வொரு விஷயத்திலும் பின்னடைவு தான் ஏற்பட்டுள்ளது.அதனால் வெறுத்துப்போய் விட்டது.- கே.நடராஜன் சுயதொழில் கருமத்தம்பட்டி,

'இளைஞர்களுக்கு வேலை இல்லை'

விலைவாசி உயர்வால், நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத்தடுக்க எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. அதை உருவாக்க தேவையான நடவடிக்கை எடுக்காமல், டாஸ்மாக்கைவளப்படுத்துவதிலேயே இந்த அரசு குறியாக உள்ளது.- ஆர்.காளியப்பன் விவசாயி, கிட்டாம்பாளையம்

'தொழில் முடங்கியுள்ளது'

சுயதொழில் செய்வதில் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. எந்த ஒரு ஆதரவும் இல்லை. தொழில் முடங்கியுள்ளது. வேலைவாய்ப்பு முற்றிலும் இல்லை. அப்படியே கிடைத்தாலும் குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது. இதை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் இல்லை.- எம்.லட்சுமிபதி சுயதொழில், ஆண்டக்காபாளையம்

'நடுத்தெருவில் விவசாயிகள்'

நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை முன்னேற்ற, எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. விவசாயிகளை நடுத்தெருவில் இந்த அரசு நிறுத்தியுள்ளது. பெயரளவுக்கு மட்டுமே திட்டங்கள் உள்ளன. அவற்றால் எந்த ஒரு பயனும் இல்லை. அவர்கள் செயல்படுத்தும் திட்டம் எல்லாம், நாட்டை சுரண்டும் திட்டங்களாகவே உள்ளன. விளைவிக்கும் பொருளுக்கு உரிய விலை கிடைக்காமல் நஷ்டத்தில் உள்ளோம். எங்கள் பொருட்களுக்கான சந்தையும் இல்லை.-நீரா.பெரியசாமி விவசாயி, உடுமலைபேட்டை

'அரசு அலுவலகங்களில் லஞ்சம்'

ஊழல் தான் முற்றிலும் நிறைந்துள்ளது. முதியவர்கள் ஏதாவது ஒரு விஷயத்துக்காக அரசு அலுவலகங்களுக்கு சென்றால், பணம் இன்றி நடப்பது கிடையாது. பெண்களுக்கு பாதுகாப்பில்லை. சட்டங்கள் மட்டுமே உள்ளன. நடைமுறையில் செயல்படுத்தப்படுவதில்லை. ஒரு குற்றம் நடந்து முடிந்த பின்னரே சட்டங்கள் இயற்றப்படுகின்றன. முன்னெச்சரிக்கையாக தடுக்க, சட்டங்கள் எதுவும் இல்லை. எங்கும் நீதியில்லை. குறிப்பாக குழந்தைகள் மீதான வன்முறை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. என்று எங்கள் குழந்தைகள் ரோட்டில் சுதந்திரமாக விளையாடுகின்றனரோ, அன்று தான் பாதுகாப்பான ஊர் என கூறுவோம்.- சி.சோபியா வக்கீல், சுந்தராபுரம்

'பாலியல் தொல்லை அதிகம்'

பாலியல் வன்கொடுமையால், பெண்கள் அடையும் துன்பத்துக்கு அளவில்லை. அதை தடுக்கவும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. சட்டம் இயற்றுபவர்கள் அதை மதிப்பதில்லை. அனைத்துக்கும் போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. பெண்களுக்கான நீதி போராடினால் மட்டுமே கிடைக்கிறது. டாஸ்மாக் மது ஒழிப்பு என்பது, வெறும் பேச்சில் மட்டுமே உள்ளது. அதன் வாயிலாக பலரும் ஆதாயமே அடைகின்றனர்.-ஈ.ரேவதி சுயதொழில், பாரதிபுரம், சூலுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Subramanian N
மார் 19, 2025 20:37

இவர்கள் இப்படி பேசுகிறார்கள் ஆனால் ஓட்டு போடும்போது திருட்டு திமுகவிற்கு போட்டுவிட்டு புலம்புவார்கள்


Mario
மார் 19, 2025 18:55

கோவை மக்கள் பிஜேபி ஆட்சி பற்றி கூறியுள்ளார்கள் அருமை


Anbilkathiravan
மார் 19, 2025 18:46

இலவசம் வேண்டவே வேண்டாம் . மருத்துவம் , கல்வி மட்டும் இலவசம் வேண்டும் . அதே போல் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக வேண்டும் .


INDIAN Kumar
மார் 19, 2025 17:50

இலவசங்கள் தேவை இல்லை வேலை வாய்ப்பை உருவாக்குங்கள் அணைத்து குற்றங்களுக்கும் காரணமாய் இருக்கும் டாஸ்மார்க்கை மூடுங்கள் மதுவில்லா ஊழல் இல்லா ஆட்சி அமைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும்.


INDIAN Kumar
மார் 19, 2025 17:48

மாற்றம் வேண்டும் மீண்டும் ஏமாற வேண்டாம் வோட்டுக்கு காசு கொடுக்கும் கட்சிகளை புறக்கணிப்போம் , புதிய கூட்டணிக்கு ஆதரவு கொடுப்போம் ஊழல் திமுக அதிமுக வேண்டாம்.


MP.K
மார் 19, 2025 16:50

கோவை மக்கள் மட்டும் எண்ணினால் ஆட்சி மாற்றம் வந்து விடுமா என்ன ?


kantharvan
மார் 19, 2025 16:37

ஆட்சி மாற்றம் வேண்டுமா? மாநிலத்தில் அல்ல மத்தியில் gst யார் கொண்டு வந்தது ?? விவசாயத்தையும் தொழிழ்களையும் நசுக்கியது யார் மக்களே?? ஒன்றிய வஞ்சக அரசுதான்?? அப்போ மக்கள் எப்படி கோபத்தை காட்டுவது?? இவர்கள் ஆட்சி மாற்றம் பற்றி கேட்டதை மக்கள் ஒன்றிய அரசிற்கு சொன்ன பதிலை தமிழகத்திற்கு என்று செய்தி வெளியிட்டுள்ளார்கள்.


Ravi
மார் 19, 2025 14:42

Roads are worst, many trees are cut in cbe definitely requires change


Nallavan
மார் 19, 2025 14:06

1 பெண்களுக்கு இலவச பஸ் பயணம் 2 பெண்களுக்கு மாதம் ரூ 1000.00 3 பள்ளி மாணவர்களுக்கு தினசரி காலை உணவு திட்டம் 4 முதியவர்களுக்கு மாதம் உதவி தொகை 5 அரசு பள்ளியில் இலவச கல்வி 6 மருத்துவமனையில் இலவச சிகிச்சை, இலவச மருந்து 6 விவசாயிக்கு இலவச மின்சாரம் 7 பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடநூல், காலணி, சீருடை 8 பொங்கல் இலவச அரிசி, சர்க்கரை 9 இலவச அவசர வூர்தி 10 அங்காடியில் இலவச அரிசி திட்டம் , மற்றும் பல


sridhar
மார் 19, 2025 18:35

தினம்தோறும் கொலை , கொள்ளை , கற்பழிப்பு , மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை, பள்ளிகளில் கஞ்சா , போதை , வீதிகளில் கள்ள சாராயம், மாணவர்கள் வேறு மொழி padikka கூடாது என்று தடை , எங்கும் எதிலும் ஊழல் , திறமை இல்லாத திமுக அடிமை போலீஸ் …. போதுமா ?


venugopal s
மார் 19, 2025 13:22

ஆட்சி மாற்றம் வேண்டும் என்பது உண்மை தான், ஆனால் பாஜகவோ பாஜக கூட்டணி கட்சிகளோ வேண்டாம்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை