உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / செவிலியர்கள் கழிப்பறையில் பென் கேமரா வைத்த டாக்டர் கைது பொள்ளாச்சி அரசு மருத்துவமனை பயிற்சி டாக்டர் கைது

செவிலியர்கள் கழிப்பறையில் பென் கேமரா வைத்த டாக்டர் கைது பொள்ளாச்சி அரசு மருத்துவமனை பயிற்சி டாக்டர் கைது

பொள்ளாச்சி:கோவை மாவட்டம், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், நேற்று கழிப்பறைக்கு சென்ற பெண் செவிலியர்கள், அங்கு பேனா கேமரா மறைத்து வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பதற்றத்துடன் வெளியேறிய செவிலியர்கள், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜாவிடம் புகார் கொடுத்தனர்.இருப்பிட மருத்துவ அலுவலர் மாரிமுத்து மற்றும் டாக்டர்கள் அங்கு சென்று பரிசோதனை செய்த போது, பேனா கேமராவை கண்டறிந்து, இதை யார் வைத்தது என, விசாரித்தனர். அதில், பயிற்சி ஆர்த்தோ டாக்டர் வெங்கடேஷ் பேனா கேமராவை வைத்தது தெரியவந்தது. இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர், கிழக்கு போலீசாரிடம் புகார் கொடுத்தார்.கூடுதல் எஸ்.பி., சிருஷ்டி சிங், இன்ஸ்பெக்டர் ரத்னகுமார், எஸ்.ஐ.,கவுதம் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று டாக்டரிடம் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில், பெண் செவிலியர்கள் பயன்படுத்தும் கழிப்பறையில் ரகசிய கேமராவை மறைத்து வைத்ததை டாக்டர் ஒப்புக்கொண்டதையடுத்து, அவரை கைது செய்தனர். இவர் பணியாற்றிய வேறு பகுதியில் இதுபோன்று கேமராக்கள் வைத்துள்ளாரா என்பது குறித்தும் விசாரிக்கின்றனர்.பொள்ளாச்சி அரசு மருத்துவமனை பயிற்சி டாக்டர் செய்த செயல், பெண் டாக்டர்கள், செவிலியர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.போலீசார் கூறியதாவது:மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன.சம்பவம் நடந்த போது பயிற்சி டாக்டர் வெங்கடேஷ், ரகசிய கேமராவில் இருந்த மெமரி கார்டை எடுத்தது தெரியவந்தது. அவரிடம் விசாரணை செய்ததில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.பத்து நாட்களுக்கு முன், 'ஆன்லைன்' வாயிலாக பென் கேமராவை வாங்கியதாக தெரிவித்தார். அவரை கைது செய்து, மொபைல்போன், மெமரி கார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்து, ஆய்வுக்கு உட்படுத்த உள்ளோம்.கைது செய்யப்பட்ட வெங்கடேஷ், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா, கீழ்குப்பம் பனமரத்துப்பட்டியை சேர்ந்தவர். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. கடந்த, 2016ம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., முடித்த இவர், 2022 முதல் கோவை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், எம்.எஸ்., ஆர்த்தோ பயின்று வருகிறார். பயிற்சியின் ஒரு பகுதியாக கடந்த, 16ம் தேதி முதல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் 15 நாட்களாக பணியாற்றி வருகிறார்.இவ்வாறு, போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

KRISHNAN R
டிச 01, 2024 22:30

மக்களோ நன்றாக .....


M S RAGHUNATHAN
டிச 01, 2024 20:42

His degree should be derecognised and then.put in jail for a period of not less than 20 years. He has brought shame to his parents and the doctor community. How can he perform his duty as a doctor with such perverted behaviour.


Muralidharan S
டிச 01, 2024 15:21

பாலியல் பெரும் குற்றங்களின் பெருக்கம் - வளர்ப்பு சரியில்லாததால்... பிள்ளைகளை குறிப்பாக ஆண்களை பார்த்து பார்த்து சிறு வயது முதலே நல்லது சொல்லி, ஆன்மீக உணர்வுகளுடன், பெற்றவர்கள் வளர்க்க வேண்டும். இரண்டாவது, இன்று சாலையோரம் திரியும் விடலைகள் முதல் மெத்த படித்த இவரை போன்ற டாக்டர்கள் கூட மொபைல் போன் மூலம் சதா சர்வ காலமும் ஆபாச படங்களை பார்த்து தீய எண்ணங்களை வளர்த்துக்கொள்கிறார்கள். மூன்றாவது மது மற்றும் போதை பொருட்கள் பயன்பாடு மிகவும் அதிகமாகி இருக்கிறது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை இந்த இரண்டாவது மற்றும் மூன்றாவது விஷயங்களில் தாங்களும் நாசமாகிக்கொண்டு வருவதோடு, பல சிறிய பெண்குழந்தைகள் உள்பட பல பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கிக்கொண்டு வருகின்றனர். கல்விமுறை நாசமாகி போனது கூட ஒரு காரணம்.. ஆசிரியர்கள் கண்டிக்க முடியாத சூழ்நிலை / காலகட்டம் ... ஆசிரியர்களே சீரழிந்து போன சம்பவங்களும் உண்டு... யாரை குற்றம் சொல்ல.... தனி மனித ஒழுக்கம் ஒன்றே இதற்க்கு தீர்வு..


Rasheel
டிச 01, 2024 12:20

கேவலமான கல்வி. கல்வி வியாபாரம் ஆகி விட்டதால் இவளவு கேவலமான நிலைமை.


jayvee
டிச 01, 2024 11:04

இன்னொரு டாக்டர் பிரகாஷ் உருவாகும் முன் இவனின் மருத்துவ தகுதியை நிரந்தரமாக விலக்கி சிறையில் குறைந்தது பத்து வருடமாவது வைக்கவேண்டும்.. என்ன ஒற்றுமை அவனும் ஆர்த்தோ இவனும் ஆர்த்தோ


Barakat Ali
டிச 01, 2024 12:12

ஆர்த்தோ .... அப்படின்னா எலும்பு வரைக்கும் ஊடுருவி பார்க்குற காமராவா இருக்குமோ ????


Barakat Ali
டிச 01, 2024 09:14

ஆமா..... வீடியோ எடுத்து அதைப்பார்த்து என்ன பண்ணுவான் ????


வைகுண்டேஸ்வரன்
டிச 01, 2024 21:59

சரியான கேள்வி.


Barakat Ali
டிச 01, 2024 09:12

போட்டோவைப் பார்த்தாலே பயமா இருக்குது ..... இவனை டாக்டர் ன்னு சொன்னா யாராச்சும் நம்புவார்களா ???? அடங்கமறு .... அத்துமீறு வகையறாவா ????


நிக்கோல்தாம்சன்
டிச 01, 2024 08:18

இவன் அந்த கழக கண்மணியின் மருத்துவ கல்லூரியில் படித்திருப்பானோ?


Raj
டிச 01, 2024 06:12

இவனெல்லாம் டாக்டர் படித்து இது போல லீலைகள் செய்யவா, இவனது சான்றிதழ்கள் எல்லாம் தமிழக அரசாங்கம் கேன்சல் செய்யவேண்டும். இவன் எங்கேயும் போய் டாக்டர் பயிற்சி எடுக்க கூடாது.


புதிய வீடியோ