உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சோலார் பேனல் உள்ள வீட்டுக்கு மின்னல் தாங்கி தேவையா?

 சோலார் பேனல் உள்ள வீட்டுக்கு மின்னல் தாங்கி தேவையா?

நே பாளம் பெருவெள்ளம் போல், பேரிடர் என்பது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். ஒரு சில விஷயங்களில் முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் பாதிப்புகளை தவிர்க்க முடியும். மழைக்காலங்களில் இடி, மின்னல் தாக்கி மரங்கள் கருகுவது, மனிதர்கள் உயிரிழப்பது விலை மதிக்க முடியாத இழப்புகளை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற சமயங்களில் மின்னல் தாங்கிகள் பாதிப்புகளை தவிர்க்கும் தடுப்பு அமைப்புகளாக பாதுகாக்கின்றன. இன்று பாதுகாப்பு கருதி மின்னல் தாங்கிகளை பலரும் நிறுவுகின்றனர். உயரமான கட்டடங்கள் அல்லது மரங்கள் இல்லாத திறந்த வெளி, மலைப்பகுதிகள் அல்லது மேடான இடத்தில் கட்டடம் இருந்து அடிக்கடி இடி, மின்னல் தாக்கம் இருப்பின் மின்னல் தாங்கி அமைத்துக்கொள்வது நல்லது. கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்க(காட்சியா) செயலாளர் மணிகண்டன் கூறியதாவது: தற்போது அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள், தொழில் நிறுவனங்கள் என அனைத்திலும் சோலார் பேனல் நிறுவுவது அதிகரித்துள்ளது. இது இயற்கை முறையில் மின் தேவையை பூர்த்திசெய்கிறது. அதேசமயம் வீட்டின் கூரையில் சோலார் பேனல் அமைத்திருந்தால் மின்னல் தாங்கி அமைப்பது அவசியம். ஏனெனில், நேரடி மின்னலையை விட, மின் கம்பிகள் வழியாக வரும் மின்னழுத்த உயர்வு காரணமாகவே வீட்டின் மின் சாதனங்கள் அதிகம் பழுதடைகின்றன. இதை தடுக்க 'டிஸ்ட்ரிபியூஷன் போர்டில் எஸ்.பி.டி., பொருத்த வேண்டும். சரியான எர்த்திங் இருப்பது அவசியம். நல்ல எர்த்திங் அமைப்பை கொண்டு இருந்தால் மட்டுமே எஸ்.பி.டி., சிறப்பாக செயல்படும். இவ்வாறு, அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை