ரேஸ்கோர்ஸ் மீடியா டவர் இயங்குமா?
கோவை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், ரேஸ்கோர்ஸில் 15 மீ உயரத்துக்கு மீடியா டவர் அமைக்கப்பட்டது. வீக் எண்ட், பண்டிகை நாட்களில் வண்ண விளக்குகள் ஒளிரும். எல்.இ.டி திரையில் பாடல்கள், குறும்படம் திரையிடப்படும். பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து பொழுதுபோக்கினர். எல்.இ.டி திரையில் பழுது ஏற்பட்டதால், பாடல்கள் திரையிடுவது தடைபட்டது. ஆகஸ்ட் மாதம் சீரமைக்கும் பணி துவங்கியது. எல்.இ.டி திரையை கழற்றி, சென்னைக்கு அனுப்பினர். இரு வாரங்களில் மீண்டும் செயல்படும் என கூறினர். 3 மாதம் கடந்தும் சரியாகவில்லை. மாநகராட்சியில் விசாரித்தோம். எல்.இ.டி திரை ரொம்ப டேமேஜ் ஆகிவிட்டது. சென்னையில் சரி செய்ய முடியாது என திருப்பி அனுப்பி விட்டனர். புதிதாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும். அதற்கான வேலையை தொடங்கி உள்ளோம் என்றனர்.