உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 31 கால்நடைகள் கோவிலுக்கு தானம்

31 கால்நடைகள் கோவிலுக்கு தானம்

உடுமலை : ஆல்கொண்டமால் கோவில் திருவிழாவையொட்டி, 31 கால்நடைகளை, பக்தர்கள் கோவிலுக்கு தானமாக வழங்கியுள்ளனர்.உடுமலை அருகே சோமவாரப்பட்டியில், பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோவில் உள்ளது. பொங்கலன்று, கால்நடைகள் ஈன்றெடுக்கும் கன்றுகளை ஆல்கொண்டமாலனுக்கு உரியது என அப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.எனவே அக்கன்றுகளை கோவிலுக்கு தானமாக வழங்குவது பாரம்பரியமாக தொடர்கிறது. அவ்வகையில், இந்தாண்டு திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம், கிடாரி, காளைக்கன்று மற்றும் ஆடு உட்பட 31 கால்நடைகளை, கோவிலுக்கு பக்தர்கள் தானமாக வழங்கியுள்ளனர்.பக்தர்கள், தானமாக கால்நடைகளை கோவிலுக்கு வழங்க கன்றுக்கு, ஆயிரம் ரூபாய் கட்டணமாக ஹிந்து அறநிலையத்துறை சார்பில் வசூலிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ