உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பத்த வெச்சிட்டு போயிறாதீங்க

பத்த வெச்சிட்டு போயிறாதீங்க

மேட்டுப்பாளையம்: ''மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்கு உட்பட்ட சாலையோரங்களில், பீடி, சிகரெட்களை, பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பிடிக்கக்கூடாது; வனத்தில் தீ விபத்து ஏற்படும் வகையில் நடந்து கொண்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஸ்டாலின் ஜோசப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கோடைகாலம் நெருங்கி வரும் நிலையில், வனத்தில் கடுமையான வறட்சி நிலவ வாய்ப்புள்ளது. வெயில் தாக்கத்தால், காய்ந்த இலைகள், செடிகள் போன்றவற்றால் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தடுக்க, மேட்டுப்பாளையம் வனத்துறை சார்பில், தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. வனப்பகுதிக்கு உட்பட்ட சாலையோரங்களில், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், பீடி, சிகரெட் புகைத்து, காய்ந்த செடிகள், புற்கள் மீது வீசினால், தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, வனப்பகுதிக்கு உட்பட்ட சாலையோரங்களில், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பீடி, சிகரெட் பிடிக்கக்கூடாது என வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து, மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறியதாவது:மேட்டுப்பாளையம் வனப்பகுதியையொட்டி உள்ள சாலையோரங்களில், ஊட்டி மற்றும் கோத்தகிரி செல்லும் சுற்றுலாப் பயணிகள் அமர்ந்து சாப்பிடுகின்றனர். சிலர், பீடி, சிகரெட் போன்றவைகளை பிடிக்கின்றனர்.அவர்கள் பிடித்துவிட்டு சிகரெட் துண்டுகளை வீசி சென்றால், அதில் உள்ள தீ கங்குகள் வாயிலாக, வனத்தில் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. கோடைகாலம் நெருங்கும் நிலையில், செடிகள், புற்கள் காய்ந்து வருகின்றன. எனவே, நீலகிரி மாவட்டம் செல்லும் சுற்றுலாப் பயணிகள் மேட்டுப்பாளையம் வனப்பகுதியையொட்டி உள்ள சாலையோரங்களில் பீடி, சிகரெட் போன்றவைகளை பிடிக்கக் கூடாது; மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.அதேபோல், மேட்டுப்பாளையம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள தங்கும் விடுதிகள், ரிசார்ட்கள், கேளிக்கை விடுதிகள் போன்றவற்றில், தீ ஆபத்து விளைவிக்கும் எந்த ஒரு செயலிலும் யாரும் ஈடுபடக்கூடாது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ