மாஸ்க் போடாம வெளியே போகாதீங்க... பொதுமக்களுக்கு அட்வைஸ்
வால்பாறை, : கொரோனா தொற்றுப் பரவி வருவதால், பொது இடங்களில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வால்பாறையில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால், ஏற்கனவே காய்ச்சல் பரவல் அதிகமாக காணப்படுகிறது. எட்டு பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு பரவி வருவதால், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என, சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: 'கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவலாக பரவி வருகிறது. தமிழகத்தில் சில இடங்களில், கொரோனா தொற்றால் மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சுற்றுலாபயணியர் அதிக அளவில் வந்து செல்லும் வால்பாறையிலும், நோய்த்தொற்று பரவாமல் இருக்க, மக்கள் வெளியில் செல்லும் போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். ஒருவருக்கொருவர் கை கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.நெரிசல் மிகுந்த இடங்களுக்கு செல்லும் போது, கட்டாயம் மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும். கைகளை நன்றாக சோப்பு போட்டு கை கழுவிய பின் உணவு அருந்த வேண்டும்.நோய் தொற்றுப்பரவலை தடுக்க சுகாதாரத்துறை சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.