உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடிநீரை குறைக்காதீங்க! பொதுமக்கள் வலியுறுத்தல்

குடிநீரை குறைக்காதீங்க! பொதுமக்கள் வலியுறுத்தல்

பொள்ளாச்சி; மக்கள் தொகைக்கு ஏற்ப, குடிநீர் வழங்க வேண்டும்,' என, எஸ்.பொன்னாபுரம் பகுதி மக்கள், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனுகொடுத்தனர்.பொள்ளாச்சி அருகே சமத்துார் எஸ்.பொன்னாபுரம் கலைஞர் நகர் பகுதி மக்கள், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம், எஸ்.பொன்னாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கலைஞர் நகரில், 250 குடும்பங்களில், 750 பேர் வசிக்கிறோம். தற்போது, இங்கு கூட்டுக்குடிநீர் திட்டத்தின் வாயிலாக குடிநீர் குறைவாக வழங்குவதாக தெரிகிறது. மேலும், மீட்டர் பொருத்தி 'லாக்' செய்யும் பணியும் நடக்கிறது.இதனால், குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் அலைமோதும் நிலை உள்ளது. எனவே, மக்கள் தொகைக்கு ஏற்ப, குடிநீர் அளவை குறைக்காமல் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !