மேலும் செய்திகள்
பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் போலீசில் கைது
13-Nov-2024
கோவை: கோவை, சவுரிபாளையம் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கு உக்கடம் புல்லுக்காடு பகுதியை சேர்ந்த பஸ் டிரைவர் ஜெயபிரகாஷ், 22 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.நாளடைவில் அது காதலாக மாறியது. இந்நிலையில், அந்த பெண்ணை திருணம் செய்து கொள்வதாக கூறி, ஜெயபிரகாஷ் அவரை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால், கர்ப்பமானார்.இதையடுத்து, அந்த பெண்ணின் பெற்றோர் ஜெயபிரகாஷ் வீட்டிற்கு சென்று திருமணம் குறித்து பேசியுள்ளனர். அப்போது, ஜெயபிரகாஷ் மற்றும் அவரின் தாயார் தகாத வார்த்தைகளால் திட்டி அனுப்பினர்.புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி, ஜெயபிரகாஷை கைது செய்தனர்.
13-Nov-2024