டிரைவரின் உடல் உறுப்புகள் தானம்
கோவை: கோவை, திருமலையம்பாளையம் பாலத்துறை தெருவை சேர்ந்த சசிக்குமார், 46, லாரி டிரைவர். 22ம் தேதி லாரியில் பராமரிப்பு பணி செய்தபோது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கே.ஜி. மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பலனின்றி, 24ல் மூளைச்சாவு அடைந்தார். சசிக்குமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய, குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். அவரது சிறுநீரகங்கள் கே.ஜி. மற்றும் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், இதயம் ராயல் கேர் மருத்துவமனைக்கும், கண்கள் சங்கரா மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன.