மேலும் செய்திகள்
இருளில் தேசிய நெடுஞ்சாலை: வாகன ஓட்டுனர்கள் அவதி
27-Sep-2025
கிணத்துக்கடவு: பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், தினமும் அதிகளவு வாகன போக்குவரத்து உள்ளது. இதில், முக்கிய இடங்கள் மற்றும் 'யு டேர்ன்' பகுதியில் உள்ள மின்விளக்குகள் முழுமையாக எரிவதில்லை. இதனால், மக்கள் பலர் நடந்து ரோட்டை கடக்கும் போது வெளிச்சம் இன்றி இருள் சூழ்ந்து இருப்பதால், வாகனங்களினால் விபத்து அபாயம் அதிகம் உள்ளது. மேலும், வாகனங்கள் திரும்பும் போதும் விபத்து நடக்க வாய்ப்பு உள்ளது. மாதத்தில் பல நாட்கள் ரோட்டின் முக்கிய பகுதிகளில் மின் விளக்குகள் எரிவதில்லை. இதே போன்று, மேம்பாலத்தின் கீழ், ஒரு சில பகுதிகளில் மின்விளக்குகள் எரிவதில்லை. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் பொள்ளாச்சி - கோவை ரோட்டில் உள்ள மின்விளக்குகள் முறையாக எரிகிறதா என அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு பராமரிப்பு செய்ய வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
27-Sep-2025