மேலும் செய்திகள்
சிட்டி கிரைம் செய்திகள்
31-Jul-2025
கோவை; கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இதன் அருகில் உள்ள பெட்டிக்கடையில் மதுபாட்டில்கள், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சோதனை நடத்தினர். அங்கு மதுபாட்டில்கள், புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்து விற்கப்படுவது தெரிந்தது. இது தொடர்பாக, சிவகங்கை மாவட்டம் கற்காலத்துாரை சேர்ந்த பாலு, 50 என்பவரை சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து, 123 மதுபாட்டில்கள், 10 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
31-Jul-2025