உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போதைப்பொருள் ஒழிப்பு போலீசார் விழிப்புணர்வு

போதைப்பொருள் ஒழிப்பு போலீசார் விழிப்புணர்வு

கோவை; போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போலீஸ் மற்றும் கல்லுாரி மாணவர்கள் சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கோவை மாநகர போலீசார் மற்றும் தனியார் நர்சிங் கல்லுாரி சார்பில் நடந்த நிகழ்ச்சியில், போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், விளைவுகளை குறித்து நடித்து, நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதேபோல், எஸ்.பி., கார்த்திகேயனின் அறிவுறுத்தலில், மாவட்ட போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு, போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !