மேலும் செய்திகள்
பெண் போலீஸிடம் தகராறு; தம்பதி மீது வழக்குப்பதிவு
02-Dec-2024
மேட்டுப்பாளையம், : மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் உள்ள வணிக வளாக கடைகளுக்கு வந்த பெண்களிடம் மதுபோதையில் வம்பு செய்த, வடமாநில இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் உள்ள வணிக வளாகத்தில், 40க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. பஸ் ஸ்டாண்டிற்கு மிகவும் அருகில் இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு மது அருந்திவிட்டு மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் வந்து குடிமகன்கள் தஞ்சம் அடைவது வாடிக்கையான நிகழ்வாக உள்ளது.நேற்று மாலை மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட், ஊட்டி பஸ்கள் நிற்கும் இடத்திற்கு பின்புறம் உள்ள வணிக வளாக கடைகள் இருக்கும் பகுதியில், வடமாநில இளைஞர் ஒருவர் மதுபோதையில் அங்கும், இங்கும் மேலாடை இன்றி சுற்றி திரிந்தார்.பின் அங்கு கடைக்கு வரும் பெண்களிடம் கை பிடித்து இழுப்பது, ஹிந்தியில் திட்டுவது என வம்பு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அந்த இளைஞரை கண்டித்து, அங்கிருந்து துரத்திவிட்டனர்.மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் மதுபோதையில் இருக்கும் இதுபோன்ற நபர்களால் பாதுகாப்பற்ற நிலை உருவாகி உள்ளது.கடந்த 28ம் தேதி, பஸ் ஸ்டாண்டில், மதுபோதையில் கணவன் - மனைவி இருவரும் அடி தடி சண்டையில் ஈடுபட்டனர். இதை தடுக்க முயன்ற பொதுமக்கள் மற்றும் பெண் போலீசாரை அவர்கள் தாக்க முயன்றனர்.---
02-Dec-2024