உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சீராக குடிநீர் வராததால் பொது மக்கள் சாலை மறியல்

சீராக குடிநீர் வராததால் பொது மக்கள் சாலை மறியல்

மேட்டுப்பாளையம் ; சீராக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என தோலம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தோலம்பாளையம் ஊராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இதில் அதிக அளவிலான மலைவாழ் கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதனிடையே ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களிலும் கடந்த 10 நாட்களுக்கும், மேலாக குடிநீர் விநியோகம் சரிவர செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த தோலம்பாளையம் மக்கள், ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, தோலம்பாளையம் பஸ் நிறுத்தம் முன் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காரமடை போலீசார் பொதுமக்களை சமாதானம் செய்தனர். இந்த சாலை மறியலால் தோலம்பாளையம் - காரமடை சாலையில், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை