மேலும் செய்திகள்
குறுமைய அளவிலான கைப்பந்து போட்டி
12-Aug-2025
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கிழக்கு குறுமைய அளவிலான தடகள போட்டிகளில் மாணவர்கள் திறமைய ை வெளிப்படுத்தி அசத்தினர். பொள்ளாச்சி சங்கவி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி சார்பில், கிழக்கு குறுமைய அளவிலான, 14,17 மற்றும், 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. கல்லுாரி செயலர் சேதுபதி, சங்கவி வித்யா மந்திர் பள்ளி தாளாளர் ரமேஷ்பாபு, முன்னாள் எம்.எல்.ஏ. சண்முகம், முன்னாள் தேசிய வாலிபால் வீரர் அபிஆதித்தியன் ஆகியோர் துவக்கி வைத்தனர். 14 வயது மாணவர்கள் பிரிவில், கூடைப்பந்து, கால்பந்து போட்டிகளில் விஸ்வதீப்தி மெட்ரிக் பள்ளி முதலிடமும், வாலிபாலில் செஞ்சேரிமலை அரசு மேல்நிலைப்பள்ளி, கோகோ போட்டியில் மாக்கினாம்பட்டி அரசுபள்ளி முதலிடம் பெற்றன. எறிபந்து போட்டியில் எஸ்.ஆர்.என்.வி. மெட்ரிக் பள்ளி, கைப்பந்து போட்டியில் காளியண்ணன்புதுார் அரசு பள்ளி, பூப்பந்து போட்டியில் ஏ.எம்.எஸ். மெட்ரிக் பள்ளி, கபடியில் அப்பநாயக்கன்பட்டி வெங்கடேஷ்வரா உயர்நிலைப்பள்ளி, மேஜைப்பந்து ஒற்றையர் பிரிவில் குட்ெஷப்பர்டு பள்ளி, இரட்டையர் பிரிவில் விஷ்வதீப்தி பள்ளி அணியும் முதலிடம் பெற்றன. 17 வயது மாணவர் பிரிவு கூடைப்பந்து போட்டியில் எல்.எம்.எஸ். மெட்ரிக் பள்ளி, வாலிபாலில் விஷ்வதீப்தி பள்ளி, கால்பந்து போட்டியில் எஸ்.ஆர்.என்.வி. பள்ளியும், கோகோ போட்டியில் வதம்பச்சேரி எஸ்.சி.எம். பள்ளிகள் முதலிடம் பெற்றன. எறிபந்து போட்டியில் சுல்தான்பேட்டை வெங்கிட்ராஜ் மெட்ரிக் பள்ளி, கைபந்து போட்டியில் காளியண்ணன்புதுார் அரசு பள்ளி, பூப்பந்து போட்டியில் விஷ்வதீப்தி மெட்ரிக் பள்ளி, கபடியில் அப்பநாயக்கன்பட்டி வெங்கடேஷ்வரா உயர்நிலைப்பள்ளி, மேஜைப்பந்து ஒற்றையர் பிரிவில் விஷ்வதீப்தி மெட்ரிக் பள்ளி, இரட்டையர் பிரிவில் கஞ்சம்பட்டி அரசு பள்ளி அணியும் முதலிடம் பெற்றன. 19 வயது மாணவர் பிரிவு கூடைப்பந்து போட்டியில் விஷ்வதீப்தி பள்ளி, வாலிபாலில் செஞ்சேரிமலை அரசு பள்ளி, கால்பந்து போட்டியில் விஷ்வதீப்தி மெட்ரிக் பள்ளி, கோகோ போட்டியில் எஸ்.சி.எம். பள்ளி அணிகள் முதலிடம் பெற்றன. எறிபந்து போட்டியில் பழனிக்கவுண்டர் மேல்நிலைப்பள்ளி, கைப்பந்து போட்டியில் காளியண்ணன்புதுார் அரசுபள்ளி, பூப்பந்து போட்டியில் விஷ்வதீப்தி மெட்ரிக் பள்ளி, கபடியில் பழனிக்கவுண்டர் மேல்நிலைப்பள்ளி, மேஜைப்பந்து ஒற்றையர், இரட்டையர் பிரிவில் கஞ்சம்பட்டி அரசு பள்ளி முதலிடம் பெற்றன. போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லுாரி உடற்கல்வித்துறை இயக்குனர் பாரதி தலைமையில் மாணவர்கள் செய்திருந்தனர்.
12-Aug-2025