மேலும் செய்திகள்
தமிழகம் முழுதும் அரசு டாக்டர்கள்... போராட்டம்
14-Nov-2024
கோவை: சென்னையில் டாக்டர் கத்தியால் குத்தப்பட்டதை கண்டித்து கோவை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த டாக்டர் பாலாஜியை சிலர் கத்தியால் குத்தினர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி டாக்டரை 4 பேர் தாக்கியது தெரிய வந்தது. இந்நிலையில், அரசு டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அரசு டாக்டர்கள் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. கோவை அரசு மருத்துவமனையில், அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடந்தது.அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவர் கனகராஜ் கூறுகையில்,''டாக்டரை கத்தியால் குத்தியது முற்றிலும் தவறு. தொடர்ந்து இதுபோல் நடந்து வருகிறது. இதுபோன்ற சம்பவம் நடக்க கூடாது என்பதற்காக சங்கம் சார்பில் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் விடப்பட்டது. ஆனால், அவை இதுவரை நிறைவேற்றித் தரப்படவில்லை. அவசர சிகிச்சை தவிர, மற்ற அனைத்து பணிகளையும் புறக்கணித்துள்ளோம். நாளையும்(இன்று) போராட்டத்தை தொடர திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.
14-Nov-2024